'சூப்பர்' கன்னட பட சிறப்புக் காட்சியில் ரஜினி!

உபேந்திரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, துலிப் ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தார் உபேந்திரா. இதனையடுத்து படத்துக்குச் சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
படத்தின் இடைவேளையின்போது, ரஜினி பேச வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல் நிருபர்கள் வற்புறுத்தவே. சிறிது நேரம் பேசினார்.
படம் சிறப்பாக இருப்பதாகவும் உபேந்திராவுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாகவும் கூறினார் ரஜினி.
இந்த நிகழ்ச்சியில் ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ் பகதூர் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
Comments


Click it and Unblock the Notifications