twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுயம்வரம் நடத்தி வரும் ராக்கி சாவந்த் மீது காப்பிரைட் மீறல் புகார்

    By Staff
    |

    Rakhi Sawant
    ரியாலிட்டி ஷோ மூலம் சுயம்வரம் நடத்தி கணவரைத் தேர்வு செய்து வரும் ராக்கி சாவந்த் உள்ளிட்ட 7 பேர் மீது காப்பிரைட் சட்டத்தின் கீழ் மோசடிப் புகாரைப் பதிவு செய்யுமாறு ஜெய்ப்பூர் போலீஸாருக்கு உள்ளூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். ராக்கி கா சுயம்வர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி ஒரு சுயம்வர நிகழ்ச்சியாகும்.

    இதில் கலந்து கொண்டுள்ள ஆண்களில் ஒருவரை தனது கணவராக அவர் தேர்வு செய்து கல்யாணம் செய்து கொள்ளவுள்ளார்.

    இதற்காக உதய்ப்பூரில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு அனைவரையும் தங்க வைத்து ஷோ நடத்தி வருகிறார் ராக்கி.

    இந்த சுயம்வரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக 3 பேர் தேறியுள்ளனர். அவர்களில் ஒருவரைத்தான் ராக்கி மணக்கப் போகிறார்.

    இந்த நிலையில் ராக்கி மீது காப்பிரைட் சட்ட மீறல் புகார் எழுந்துள்ளது.

    இதுகுறித்து கெளரவ் திவாரி என்பவர் ஜெய்ப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், கடந்த ஆண்டு நான் சுயம்வர் என்ற பெயருக்கு காப்பிரைட் செய்து உரிமை வாங்கினேன். மேலும், இதுதொடர்பாக ஒரு ஸ்கிரிப்டையும் நான் தயாரித்து வைத்திருந்தேன். இதை ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலிடமும் காட்டியிருந்தேன்.

    இந்த நிலையில், இந்த இரண்டையும் ராக்கி சட்டத்திற்குப் புறம்பாக பயன்படுத்தி ராக்கி கா சுயம்வர் என்ற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார்.

    இது காப்பிரைட் சட்டப்படி மீறலாகும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ராக்கி சாவந்த் உள்ளிட்ட 7 பேர் மீது காப்பிரைட் சட்ட விதி மீறல் வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X