'ஜட்ஜ்' ஆகும் ரவீனா

90களில் பாலிவுட்டின் ஹாட் ஸ்டார்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரவீனா. ஆனால் பல இளம் புயல்கள் சகட்டுமேனிக்கு பாலிவுட்டை சுற்றி வளைத்ததால் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு திருமண பந்தத்திற்குள் புகுந்தார் ரவீனா. குழந்தைகள், கணவர், குடும்பம் என புது வாழ்க்கையை கடந்த சில வருடங்களாக கழித்து வரும் ரவீனா, இப்போது மீண்டும் கேமராவுக்கு முகம் காட்ட வருகிறார்.
9எக்ஸ் பொழுதுபோக்கு சானலில், புதிதாக ஒளிபரப்பப்படவுள்ள டான்ஸ் ஷோதான் சக் தே பச்சே. மார்ச் 28ம் தேதி முதல் இது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும்.
பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 24 சிறார்கள் இதில் கலந்து கொண்டு தங்களது நடனத் திறமையை வெளிக்காட்டவுள்ளனர். அதில் சிறப்பிடம் பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த நிகழ்ச்சியின் நடுவராக ரவீனா செயல்படவுள்ளார்.
இதுகுறித்து ரவீனா கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலம் குழந்தைகளுக்கு புது நம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும் உருவாகும். அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமையை வெளிக் கொண்டு வர இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து, அவற்றை மதிப்பிட்டு, மார்க் போட்டு, வெற்றி பெற்ற குழந்தையை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமானது. அந்தப் பணி என்னிடம் தரப்பட்டுள்ளதைக கெளரவமாக கருதுகிறேன் என்றார்.
போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரியும், டிவி நடிகை ரோஷினி சோப்ராவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளனர்.
ரவீனா தவிர நடனக் கலைஞர் கணேஷ் ஆச்சார்யா, இசையமைப்பாளர்கள் சலீம், சுலேமான் ஆகியோரும் நடுவர்களாகப் பணியாற்றவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











