twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிள்ளையார் படத்தில் நடிக்க சச்சின் டெண்டுல்கர் ஒப்புதல்

    By Staff
    |

    Sachin Tendulkar with Sania Mirza
    மும்பை: இதுவரை விளம்பரப் படங்களில் மட்டுமே நடித்து வந்த உங்கள் சச்சின் டெண்டுல்கர் முதல் முறையாக வெள்ளித் திரையிலும் தனது நடிப்பாற்றலைக் காட்ட வருகிறார்.

    கடவுள் கணேசரின் திருவிளையாடல்களை விளக்கும் பாலிவுட் படம் ஒன்றில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்.

    கிரிக்கெட் வீரர்கள் சினிமாவிலும் அவ்வப்போது தலை காட்டுவது சகஜமாகி வருவது. அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரும் நடிக்க வருகிறார்.

    விக்னஹர்த்த ஸ்ரீ சித்திவிநாயக் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் கிரிக்கெட் வீரராகவே சச்சின் நடிக்கிறார். இதுகுறித்து இப்படத்தை தயாரிக்கும் ராஜீவ் சிங்வி கூறுகையில், சிறிய ரோலில் சச்சின் நடிக்கிறார். ஒரு பாடல் காட்சியிலோ அல்லது கிரிக்கெட் விளையாடுவது போன்றோ சச்சின் நடிப்பார்.

    சச்சின் விநாயகரின் பக்தர். எனவே இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் அவர் ஒப்புக் கொண்டார். இலவசமாக நடித்துத் தரவும் ஒப்புக் கொண்டுள்ளார் என்றார் சிங்வி.

    இப்படத்தை மும்பையில் உள்ள பிரபல சித்திவிநாயக் கோவில் அறக்கட்டளை தயாரிக்கிறது.

    அறக்கட்டளை தலைவர் சுபாஷ் மேயகர் கூறுகையில், சித்திவிநாயக் கோவிலுக்கு பல வருடங்களாக சச்சின் வந்து செல்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விநாயகர் பல வழிகளிலும் உறுதுணையாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க அவர் மனமுவந்து ஒத்துக் கொண்டார் என்றார்.

    தற்போது இலங்கை டெஸ்ட் பயணத்தில் இருக்கும் சச்சின் அதை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் ஷூட்டிங்குக்குப் போகிறாராம். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் அமிதாப் பச்சன் தனது குரலை கொடுக்கவுள்ளாராம்.

    சச்சினை 'பெப்சி' கைவிட்டாலும் 'பிள்ளையார்' கைவிடவில்லை. சச்சின், நல்லா நடிங்க, அப்படியே ஆட்டத்தையும் பார்த்துக்குங்க!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X