'கனத்தை' எதிர்பார்க்கும் 'தனம்'!

ரசிகா என்ற பெயரில் நடித்தபோது சங்கீதாவை முழுக்க முழுக்க கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தினார்கள் தமிழிலும், தெலுங்கிலும். அவரும் முடிந்தவரை கிளாமர் காட்டி வந்தார். ஆனாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை சங்கீதாவால்.
ஆனால் உயிர் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்த பிறகு அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் பறந்தோடி வந்தன. அதே டைப்பிலான கேரக்டராகவே பல வாய்ப்புகள் இருந்ததால் பல வற்றை தட்டி விட்டார் சங்கீதா.
நல்ல கதைகளை மட்டும் செலக்ட் செய்து நடித்து வருகிறார். தமிழில் தற்போது தனம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் வித்தியாசமான கேரக்டராம். அதேபோல தெலுங்கில் கனகம் என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் கதை, கருத்தம்மா படத்தின் கதையைப் போலவே இருக்கிறது. பெண் சிசுக் கொலையிலிருந்து தப்பி பெரிய படிப்பு படித்து பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் அதிகாரி கேரக்டராம் சங்கீதாவுக்கு.
இப்படிப்பட்ட கேரக்டர் என்றால் நடிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோலத்தான், கனமான கேரக்டரில் நடிக்கவே நான் விரும்புகிறேன். வெறும் கிளாமர் எனக்கு வேண்டாம். அதைத் தாண்டி வந்து விட்டேன். நடிக்கவும் வாய்ப்பிருந்தால் மட்டுமே நடிப்பேன் என்கிறார் சங்கீதா.


Click it and Unblock the Notifications











