தெலுங்குப் படத்தில் சானியா!

தமிழிலும், தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுக்கு வாரிசுகள் வந்து விட்டார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக சேருபவர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யா ஹீரோவாகப் போகிறார் என்று கொஞ்ச காலமாகவே பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. இப்போது அது நடக்கப் போகிறது.
வாரிசுகளை ஸ்டார் ஆக்குவதில் பிரபலமான பூரி ஜெகன்னாத்தான், நாக சைதன்யாவையும் அறிமுகப்படுத்தப் போகிறார். ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே கலக்கி விட வேண்டும் என்பதற்காக நடனம், தற்காப்புக் கலை, நடிப்புப் பயிற்சி, வசன உச்சரிப்பு உள்ளிட்டவற்றில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறாராம் நாக சைதன்யா.
இப்படத்தில் சானியா மிர்ஸா ஐந்தே ஐந்து நிமிடம் ஒரு காட்சியில் வந்து போகிறாராம். இக்காட்சி படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டும் என்கிறார் பூரி. இந்தக் காட்சியில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார் சானியா.
ஏற்கனவே சானியாவை தனது படத்தில் நடிக்குமாறு கேட்டிருந்தார் பூரி. ஆனால் அப்போது டென்னிஸ் போட்டிகளில் தீவிரமாக இருந்ததால் ஸாரி சொல்லியிருந்தார் சானியா. ஆனால் இப்போது ஐந்து நிமிடங்கள் மட்டும் வந்து போகிற காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே நம்ம ஊர் சிம்பு சானியாவை அணுகியபோது சிம்பு யார் என்று கேட்டு டி.ஆர். தரப்பை டென்ஷன் ஆக்கியிருந்தார். இப்போது தெலுங்குப் படத்தில் தலை காட்டப் போகிறார். அப்படியே இந்திக்கும் போவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











