சீமானின் 'கொம்பன்'

சீமான் கடைசியாகக் கொடுத்த படம் வாழ்த்துக்கள். படம் முழுக்க ஆங்கிலக் கலப்பில்லாமல் அழகாக இயக்கியிருந்தும் கூட வணிக ரீதியாக அப்படம் பெரிய வசூலைக் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் சீமான். இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கவுள்ளார். ஏற்கனவே ஜீவா நடித்த பொறி படத்தில், சீமானும் சின்ன வேடத்தில் நடித்திருந்தார். இந்த வகையில் இருவரும் இணையும் இரண்டாம் படம் கொம்பன்.
ஆரம்பத்தில் தொடர்ந்து தோல்விகளைக் கொடுத்தவர்தான் சீமான். பாஞ்சாலங்குறிச்சி, வீர வணக்கம், இனியவளே, என்னுயிர் நீதானே ஆகிய படங்கள் வணிகச் சந்தையில் சீமானுக்குத் தோல்வியைக் கொடுத்த படங்கள்.
ஆனால் தம்பி, சீமானுக்கு பெரும் உயர்வைக் கொடுத்த படம். தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியம் வேண்டும் என்பதை நெற்றிப் பொட்டில் தட்டிச் சொன்ன அந்தப் படம் மாதவனுக்கும் மிகப் பெறும் திருப்பமாக அமைந்தது.
ஆனால் அடுத்து இருவரும் இணைந்து வாழ்த்துக்கள், இருவரையும் ஏமாற்றின. இத்தனைக்கும் படம் முழுக்க ஆங்கிலக் கலப்பில்லாத வசனங்களை வைத்திருந்தார் சீமான். பாடல்களிலும் தமிழ் தாலாட்டியது. ஆனாலும் தமிழர்கள் வாழ்த்துக்களை, தோல்விப் படமாக்கினர்.
இந்த நிலையில்தான் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட சீமான் இப்போது புத்தம் புதிய திரைக்கதையுடன் களத்தில் இறங்கியுள்ளார். கொம்பன் என பெயரிட்டுள்ள சீமான், ஜீவாவை நாயகனாக தேர்வு செய்துள்ளார். பிற கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளார்.
ஜீவாவுக்கும் இப்படம் முக்கியமானதுதான். காரணம் அவர் தொடர்ந்து தோல்விப்படங்களை சந்தித்து வருகிறார். தெனாவெட்டு படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். தொடர் தோல்விக்கு பெயர் இலக்கணம் சரியில்ைல என்று நினைத்தாரோ என்னவோ, தனது பெயரை ஜீ வா என பிரித்து வைத்துள்ளார். தெனாவெட்டு படத்தில் அப்படித்தான் பெயர் இடம் பெறுகிறதாம்.


Click it and Unblock the Notifications











