twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கையில் குருஷேத்திரம்... சிங்கப்பூரில் தயாரான தமிழ்ப் படம்!!

    By Sudha
    |

    Singayil Gurushethram
    பொதுவாக தமிழ்ப் படங்கள் கோடம்பாக்கத்தைத் தாண்டி வெளியில் தயாராகாது என்ற நிலைதான் இதுவரை இருந்தது.

    ஆனால் இப்போது நிலைமையே வேறு. கனடா வாழ் தமிழர் தயாரித்த '1999' படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லும் அருமையான படைப்பு என்று விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள் அந்தப் படத்தை.

    இப்போது சிங்கப்பூர் தமிழர்கள் ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்துக்கு சிங்கையில் குருஷேத்திரம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

    இதில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள். முழுப் படப்பிடிப்பும் மலேசியா மற்றும் சிங்கப்பூரிலேயே நடத்தப்பட்டுள்ளது.

    டி டி தவமணி என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே.

    பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லூகாஸ் ஜேடோன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ஜக்குபாய் படத்துக்கு இசையமைத்த ரஃபி இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களைப் புனைந்துள்ளார்.

    சிங்கையில் குருஷேத்திரம் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. வைரமுத்து, இயக்குநர் சரண், மதன் கார்க்கி, நடிகை மானு உள்பட பலர் பங்கேற்று ட்ரைலரை வெளியிட்டு வாழ்த்திப் பேசினர்.

    சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள், வாழ்க்கைப் போராட்டத்தால் தடம் மாறும் இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு சர்வதேசத் தரத்தில் அமைந்துள்ளதாகப் பாராட்டினர் இயக்குநர் சரணும், வைரமுத்துவும்.

    காதல் மன்னன் படத்தில் நாயகியாக நடித்த மான்யா, தன் பெயரை மானு என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X