ஆல்பாவுக்கு 'அல்வா'-சினேகாவுக்கு கோவா!

வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் படம் கோவா. சவுந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தே வார்னர் பிரதர்சுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
இதில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா ஆல்பாவை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து அம்மணியிடம் பேசிய போது அவர் கேட்ட சம்பளம் இயக்குனரை மயக்கம் போட வைத்துள்ளது.
அவர் கேட்ட தொகை கொஞ்சமல்ல 14 கோடி ரூபாய். இது படத்தின் பட்ஜெட்டான 6 கோடியை ரூபாயை விட இரண்டு மடங்கு அதிகம் என்பதால் பட குழுவினர் முழி பிதுங்கி வேறு வழியில்லாமல் அவரை நீக்கிவிட்டனார்.
தற்போது மலிவு விலையில் எதாவது வெள்ளைக்கார நடிகை சிக்குவாரா என தேடி வருகின்றனர்.
இப்படத்தில் உள்ள பல கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க சினேகா ஒப்பந்தமாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











