'கவர்ச்சிகர' ஸ்ருதி

கலைஞானி கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் இசையின் மீது தீராத காதல் கொண்டவர். இப்போது நடிப்பாசையும் தொற்றிக் கொண்டுள்ளது. அவரும், மாதவனும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ அது கை கூடாமல் போய் விட்டது, இப்போது படம் கைவிடப்பட்டு விட்டது.
இந்த நிலையில், பேஷன் இதழான வெர்வ் இதழில் ஸ்ருதியின் பேட்டி வெளியாகியுள்ளது. கூடவே இதுவரை அவர் தோன்றியிராத அளவுக்கு சற்றே கவர்ச்சிகரமான படங்களும் வெளியாகியுள்ளன.
17 வயதாகும் ஸ்ருதி, தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் கண்ணைக் கவரும் வகையிலான காஸ்ட்யூம்களில்தான் வந்து போகிறார். சமீபத்தில் தசாவதாரம் பட ஆடியோ விழாவிலும் அனைவரையும் கவர்ந்தார்.
இந் நிலையில் வெர்வ் இதழில் அவருடைய கவர்ச்சிகரமான படங்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் பேட்டியில் கமல்ஹாசன் குறித்தும், சரிகா குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார் ஸ்ருதி. இசையின் மீது தனக்கு ஏற்பட்ட காதல் குறித்தும் விளக்கியுள்ளார்.
மாதவனுடன் நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டதற்கு சில கிரியேட்டிவ் கருத்து வேறுபாடுகள்தான் காரணம் என்று கூறியுள்ளார் ஸ்ருதி. இருப்பினும் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது நடிப்பறிமுகம் அரங்கேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஸ்ருதி.


Click it and Unblock the Notifications











