சக்கரகட்டியின் வெளிநாட்டு சாதனை!- தாணு சந்தோஷம்!

By Staff

Sakkarakatti movie still
என் இத்தனை வருட தயாரிப்பாளர் அனுபவித்தில் வெளிநாட்டுக்கு 40 பிரிண்டுகளை அனுப்பிய முதல் படம் சக்கரகட்டிதான் என்கிறார் தயாரிப்பாளர் தாணு பெருமையுடன்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் அவர் மகன் கலாபிரபு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் சக்கரகட்டி.

பாக்யராஜ் மகன் சாந்தனு நாயகனாகவும், வேதிகா நாயகியாகவும் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வெளிவரும் முன்பே பாடல்கள் படுஹிட்டாகி விற்பனையில் பெரும் சாதனை படைத்தன.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியானது.

வெளிநாடுகளுக்கு முதலில் 32 பிரிண்டுகளை அனுப்பினாராம் தாணு. ஆனால் மேலும் பிரிண்டுகள் வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கேட்டதால் 7 கூடுதல் பிரிண்டுகளை அனுப்பியுள்ளாராம் தாணு.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நான் தயாரிப்பாளராகி இத்தனை ஆண்டுகளில் எந்தப் படத்துக்கும் 40 பிரிண்டுகளை வெளிநாட்டுக்கு அனுப்பியதில்லை. முதன்முதலாக சக்கரகட்டிக்குத்தான் இத்தனை பிரிண்டுகளை அனுப்பியுள்ளேன். புதுமுகங்கள் உருவாக்கிய இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு எனக்கு நிறைய நம்பிக்கைகளைத் தந்துள்ளது.

அதேபோல இந்தப் படத்தைதான் நாங்கள் குடும்பத்தோடு தியேட்டரில் பார்த்தோம்.

என் மகன் கலாபிரபு இதுவரை எந்த இயக்குநரிடமும் வேலை பார்த்ததில்லை. அவனே சுயம்புவாக இந்த முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றுள்ளான். இந்தப் படத்தையும் பாடல்களையும் கேட்ட தெலுங்கு தயாரிப்பாளர்கள், இப்போது கலாபிரபுவை ஒரு தெலுங்குப் படம் பண்ண அழைக்கிறார்கள், என்றார் தாணு.

ஈன்ற பொழுதினும்....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X