ரஹ்மானின் 'மிஷன் உஸ்தாத்'

மிஷன் உஸ்தாத் என பெயரிடப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில், இந்தியாவைச் சேர்ந்த 10 பாரம்பரிய மற்றும் மெல்லிசைப் பாடகர்கள் கலந்து கொண்டு கலக்கவுள்ளனர்.
இவர்கள் ஐந்து ஜோடிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இறுதியில் வெற்றி பெறும் ஜோடிக்கு 'உஸ்தாத் ஜோடி' என்ற பட்டம் வழங்கப்படும்.
கிட்டத்தட்ட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இசைக் குடும்பம் நிகழ்ச்சியைப் போன்றதுதான் இது.
ரூப் குமார் ரத்தோட்-அவரது மனைவி சோனாலி ரத்தோட், கைலாஷ் கெர்-மகாலட்சுமி ஐயர், வசுந்தரா தாஸ் - மோஹித் செளகான், நரேஷ் அய்யர் - ஷ்வேதா பண்டிட் ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
இதில் ரஹ்மான் நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளார். இதில் இடம் பெற்றுள்ள இன்னொரு பிரபலம் முன்னாள் உலக அழகி லாரா தத்தா. கிளாமர் தேவதையான சிமோன் சிங், இந்த ஷோவை காம்பியரிங் செய்யவுள்ளார்.
ஐ.நா. சபை, என்டமோல் மற்றும் 9எக்ஸ் சேனல் ஆகியவை இணைந்துப் போட்டியை நடத்தவுள்ளன.


Click it and Unblock the Notifications











