இன்று பெங்களூரில் நடிகர் விவேக் ஒபராய்-பிரியங்கா திருமணம்!

By Sudha

Vivek Oberoi and Priyanka Alva
பெங்களூர்: இந்தி நடிகர் விவேக் ஒபராய்-பிரியங்கா திருமணம் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரில் நடக்கிறது.

இந்திப் பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விவேக் ஒபராய். தொடர்ந்து கிசுகிசுக்கள், சர்ச்சைகளில் சிக்கி வருபவர்.

ஏற்கெனவே நடிகைகள் நீரு பாஜ்வா, ஐஸ்வர்யாராய், வித்யா பாலன் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார். இவர்களில் யாராவது ஒருவரை விவேக் ஒபராய் மணம் முடிப்பார் என்று இந்தி திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் அவர்களுடனான விவேக்கின் காதல் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் விவேக் ஒபராய்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்த விழா நடந்தது. அவருக்கும், கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வா-நந்தினி தம்பதிகளின் மகள் பிரியங்காவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர்.

மணமகள் பிரியங்கா, லண்டனில் பி.பி.எம். பட்டப்படிப்பு படித்தவர். இவருடைய தாய் நந்தினி ஆல்வா பிரபல நடன கலைஞர்.

விவேக் ஒபராய்-பிரியங்கா திருமணம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. பஞ்சாபி மற்றும் மங்களூர் முறைப்படி திருமண சடங்குகள் நடக்கிறது. அதை தொடர்ந்து மாலை 5 மணி அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

மணமக்களுக்கு வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் தனி வரவேற்பு விழா நடைபெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X