விவேக் ஒபராய்க்குத் திருமணம்... கர்நாடக முன்னாள் அமைச்சர் மகளை மணக்கிறார்!

By Sudha

Vivek Oberoi and Priyanka Alva
மும்பை: பிரபல நடிகர் விவேக் ஒபராய்க்கும், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 29-ந் தேதி திருமணம் நடக்கிறது.

இந்தி படவுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விவேக் ஒபராய். திரைப்படங்களில் நடித்தபோது கிடைத்த புகழைவிட, ஐஃபா விழாவுக்குப் போனதன் மூலம் பரபரப்பைச் சம்பாதித்துக் கொண்டவர் இவர்.

கடந்த 2002-ம் ஆண்டில் பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா இயக்கிய கம்பெனி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறி்முகமானார். ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் விவேக் ஒபராய்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். கடந்த சில மாதங்களாக தங்கள் மகனுக்கு ஏற்ற பெண்ணை அவர்கள் தீவிரமாக தேடி வந்தார்கள்.

இந்த சமயத்தில் பெங்களூரைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணை அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. உடனே திருமணத்துக்கு இரு தரப்பு வீட்டாரும் சம்மதித்தார்கள்.

மணப்பெண் பிரியங்கா புகழ் பெற்ற நடனக்கலைஞர். 28 வயதாகும் இவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜீவராஜ் ஆல்வா- நந்தினி ஆல்வா தம்பதியின் மகள் ஆவார். லண்டனில் தொழில் நிர்வாகம் குறித்த படிப்பில் பட்டம் பெற்றவர்.

அக்டோபர் 29-ல் திருமணம்!

திருமண தகவலை பிரியங்காவின் பெற்றோர் உறுதி செய்தனர். நடிகர் விவேக் ஒபராய்-பிரியங்கா திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். திருமணம் அக்டோபர் மாதம் 29-ந் தேதி திருமணம் நடைபெறுகிறது.

விவேக் ஒபராய்க்கு வரும் செப்டம்பர் 3-ந் தேதி அன்று 34 வயது முடிந்து 35-வது வயது பிறக்கிறது. எனவே பிறந்த நாள் கழிந்ததும் திருமணம் நடைபெற இருக்கிறது.

மணப்பெண் பிரியங்கா கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதியில் வசிக்கும் பந்த் வகுப்பைச் சேர்ந்தவர். முன்னணி நடிகரான அபிஷேக் பச்சன் இதே வகுப்பைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராயை திருமணம் முடித்துள்ளார். அந்த வழியில் தற்போது விவேக் ஒபராயும் இந்த சமூகத்தின் மருமகன் ஆகப் போகிறார்.

விவேக் ஒபராயின் மூதாதையர்கள் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸைச் சேர்ந்தவர்கள். ஐதராபாத்தில் பிறந்த விவேக் ஒபராய் மும்பையில் உள்ள மித்திபாய் கல்லூரியில் படித்தார். இவரது தந்தை சுரேஷ் ஓபராயும் நடிகரே. விவேக் ஒபராய்க்கு இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, நேபாளி, கன்னடம், ஸ்பானிஷ், வங்காளம் ஆகிய மொழிகள் நன்றாக தெரியும்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கியது. அப்போது மோசமாக பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதியில் விவேக் ஒபராய் முகாமிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பாட்டிஉள்ளிட்டோர் சென்னையில் வசிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X