தமிழ் சினிமா 2009-முக்கிய நிகழ்வுகள்

By Staff

Nagesh
ஜனவரி

2 - நடிகர் எம்.ஜி.சி.சுகுமார் மரணமடைந்தார். இவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகன்.

31- நகைச்சுவைத் திலகம் நாகேஷ் மரணமடைந்தார்.

பிப்ரவரி

1- நடிகை சங்கீதாவுக்கும், பாடகர் கிரீஷுக்கும் திருமணம் நடந்தது.

5- காவ்யமாதவனுக்கும் குவைத்தில் பணியாற்றி வரும் நிஷால் சந்திராவுக்கும் திருமணம் நடந்தது.

22 - நடிகை விநோதினி தொழிலதிபர் ஸ்ரீதரை மணந்தார்.

23 - இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய இசை ரசிகர்களை சந்தோஷக் கடலில் மூழ்கடித்தார்.

மார்ச்

1 - நடிகை மதுமிதா, தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை மணந்தார்.

12 - நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணமடைந்தார்.

18 - ஆசினின் டச்சப் மேன் நல்லமுத்துக்குமார் மாயமாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஏப்ரல்

26 - ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் மரணம்.

27 - இந்தி நடிகர் பெரோஸ்கான் மரணம்.

30 - பிரஷாந்த், கிரகலட்சுமி திருமணம் செல்லாது என குடும்ப நல கோர்ட் தீர்ப்பு.

மே

2 - நடிகர் பாலாஜி மரணம்.

25 - சேது பட நாயகி நடிகை அபிதாவுக்குத் திருமணம் நடந்தது.

ஜூன்

4 - நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி திருமணம் நடந்தது.

ஜூலை

12- நடிகை மீனாவுக்கும் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகருக்கும் திருமணம் நடந்தது.

ஆகஸ்ட்

2 - நடிகை ராக்கி சாவந்த், டிவியில் சுயம்வரம் நடத்தி எலேஷ் பருஜன்வாலா என்பவரை தனது கணவராக தேர்வு செய்தார். ஆனால் இப்போது இந்த ஜோடி டமால் டுமீல் என பிரிவது உறுதியாகி விட்டது.

6- மலையாள நடிகர் முரளி மரணம்.

12- விவகாரத்து கேட்டு சோனியா அகர்வாலும், செல்வராகவுனும் கோர்ட் படியேறினார்கள்.

16 - சினேகாவுக்கு காதல் எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக கூறி பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.

28 - பிரகாஷ் ராஜின் மனைவி ரூ. 2 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு குடும்ப கோர்ட்டில் மனு செய்தார்.

செப்டம்பர்

7 - காஞ்சிவரம் சிறந்த படமாக தேசிய விருது பெற்றது. பிரகாஷ் ராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

28 - கலைஞானி கமல்ஹாசனின் திரையுலக பொன்விழாவை விஜய் டிவி பிரமாண்ட விழா எடுத்துக் கொண்டாடியது.

அக்டோபர்

2 - வீட்டில் விபச்சாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார்.

21 - விக்ராந்த், மானசா திருமணம் நடந்தது.

நவம்பர்

22 - ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவை மணந்தார்.

28 - ஆசின், பரத், தேவிப்பிரியா உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

டிசம்பர்

8 - திரைப்பட விருது விழா. ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதுகள் வழங்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதை கமலும், ரஜினியும் இணைந்து அளித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X