'கஜினி' விளம்பரத்தால் பெண் டாக்டர் அவதி

By Staff

Aamir in Ghajini
கஜினி படத்துக்காக வெளியான ஆமிர்கானின் விளம்பரத்தால் பெண் டாக்டர் ஒருவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஆமிர்கான்-ஆசின் நடிக்கும் இந்திப் படம் கஜினி. மும்பையில் சில இடங்களில் இப்படத்தின் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த விளம்பர படத்தில் ஆமிர்கானின் உடலில் பல்வேறு பெயர்கள், முகவரி, போன் நம்பர் ஆகியவை எழுதப்பட்டிருக்கும். அதில் எழுதப்பட்டிருந்த ஒரு செல் நம்பர், கஞ்சூர்மார்க் பகுதியைச் சேர்ந்த சுரேகா வர்மா என்ற பெண்ணுடையது!.

அந்தப் பெண் ஒரு டாக்டர். கஜினி விளம்பரம் வெளியானதும் சுரேகாவுக்கு ஏகப்பட்ட நபர்கள் போன் செய்து, ஆமிர் கான் இருக்கிறாரா? எனக் கேட்டுள்ளனர். இதனால் தனது சொல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் சுரேகா.

இச்சம்பவத்தை அறிந்ததும், சுரேகாவிடம் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார் ஆமிர் கான்.

இதுகுறித்து ஆமீர் கூறியுள்ளதாவது: எனது பட விளம்பரத்தால் டாக்டர் சுரேகா சிரமத்துக்குள்ளானது வேதனையாக உள்ளது. அவருக்கு எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு உதவி இயக்குனர் தற்செயலாகக் கொடுத்த செல் நம்பர் அது. விளம்பரங்களில் மட்டுமில்லாமல் படத்திலும் அந்த நம்பர் இடம்பெறும். இதனால் பாதிக்கப்பட்டுள்ள சுரேகாவுக்கு வேறொரு செல் நம்பரை வாங்கித் தந்து விடுகிறோம் என்று கூறியுள்ளார்.

அடடா... எப்படியெல்லாம் தொல்லை வருது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X