அட்னான் சமி கைது-விடுதலை

அட்னான் சமியின் மனைவி சபா கலாத்ரி கோர்ட்டில் சமி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என்னை வீட்டிலிருந்து துரத்த சமி முயல்கிறார். மேலும், அவருக்கு இன்னொரு பெண்ணுடன் தகாத உறவும் உள்ளது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சமி மீது மோசடி மற்றும் சித்திரவதை வழக்கை போலீஸார் தொடர்ந்தனர்.
இதையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தில் சமி முன்ஜாமீன் பெற்றார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், சமியை போலீஸார் கைது செய்வதாக இருந்தால், அதை முன்கூட்டியே சமிக்குத் தெரியப்படுத்த வேண்டும், பின்னர் இரு நபர் ரொக்க ஜாமீனில் அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் நேற்று சமியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் கோர்ட் உத்தரவுப்படி, அவரை தலா ரூ. 15,000 இரு நபர் ரொக்க ஜாமீனில் போலீஸார் விடுவித்தனர்.


Click it and Unblock the Notifications











