யாருக்கும் அடங்காத அட்டு!

Attu
அட்டு என்ற தலைப்பில் புதிய படம் ஒன்று தயாராகிறது.

ஆண்ட்ஸ் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் என்.வி.பிரவீன், ஆர்.மணிமாறன் ஆகியோர் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் இந்த முதல் படத்தில் நடிக்கும் நாயகன், நாயகி அனைவரும் புதியவர்களே.

அதென்ன அட்டு?

யாருக்கும் அடங்காதவன் என்று பொருளாம் இந்தத் தலைப்புக்கு (அப்படியா!). வடசென்னைதான் கதையின் பின்புலம்.

பல விளம்பரப் படங்களையும் குறும்படங்களையும் இயக்கிய ஸ்டீவன் 'அட்டு' படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகம் ஆகிறார். சித்திரம் பேசுதடி உள்ளிட்ட மிஷ்கினின் படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக இருந்த வெற்றிவேல் முதல் முறையாக இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

'போபோ' சசி படத்திற்கு இசையமைக்கிறார். இதற்கு முன்பு இவர் 'குளிர் 100' படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி, ஆகியோருள் முரளியின் மகன்தான் இந்த சசி.

பிரபல ஓவியர் ஜே.பி.கிருஷ்ணாவின் மகன் ஜே.பி.கே.பிரேம் இந்தப் படத்தில் கலை இயக்குநராக அறிமுகமாகிறார்.

மக்கள் தொடர்பு நிகில். இப்போது படப்பிடிப்புக்கான ஒத்திகை நடக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X