மோனிகா கவர்ச்சி.. 'சீப்' சிலந்தி!

By Staff

Monika
ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் விளம்பரம் தேடுகிறார்கள் பாருங்கள்...

அழகி, சண்டக்கோழி, இம்சை அரசன் 23ம் புலிகேசி ஆகிய படங்களில் நடித்தவர் மோனிகா. இரண்டாம் கட்ட நாயகியாகத்தான் இன்னமும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

தற்போது சிலந்தி' என்ற படத்தில் நடித்து வரும் இவர், இப்படத்தில் முதல்முறையாய் கவர்ச்சியாக நடிப்பதாக கொஞ்ச நாட்களுக்கு முன் செய்தியைப் பரப்பினார்கள்.

சில தினங்களுக்குப் பிறகு படுக்கையறைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தபோது படத்தின் புதுமுக நாயகன் முன்னாவின் கை படப்படாத, தொடப்படாத இடங்களில் பட்டு, தொட்டு, கெட்ட இம்சை செய்ததாக முன்னணிப் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்க, ஒரு வாரம் வரை அந்த 'பிட்' ஏக பில்டப்புடன் ஓடியது.

அடுத்து படத்தின் இசையமைப்பாளர் நீல் முகர்ஜி சொன்ன பேச்சைக் கேட்கவில்லை என்று அவரைத் தூக்கிவிட்டதாக ஒரு செய்தி. ஆனால் அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை போலிருக்கிறது. இப்போது மீண்டும் கவர்ச்சியையையே கையில் எடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

சமீபத்தில் பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது, ஹீரோ முன்னா அத்துமீறி அந்தரங்கப் பகுதிகளில் தொட்டுவிட்டதாக, அந்த நடிகையே புகார் செய்ததாகவும் அதன் விளைவாக அந்தப் பாடலின் மிச்சக் காட்சிகளில் மோனிகா தனியாகவே டூயட் பாடியதாகவும்(தனியா பாடினா எப்படிண்ணே அது 'டூயட்' ஆகும்?) நேற்று பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது.

என்னப்பா பிரச்சினை என்று ஹீரோ முன்னாவிடம் கேட்டால், முதல்முறை காதல் காட்சிகளில் நடிப்பதால் நடுக்கத்தில் படக்கூடாத இடத்தில் கை பட்டுவிட்டிருக்கும். வேற எதுவும் எனக்குத் தெரியாது என்கிறார் நக்கலாக!

ஆனால் உண்மை நிலவரம் வேறு...

படம் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் எதிர்பார்த்த பிஸினஸ் இல்லாததால் இப்படி விளம்பரப்படுத்தப்படுவதாக ஒரு வினியோகஸ்தர் நம்மிடம் தெரிவித்தார்.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X