இயக்குனர் சங்க தலைவர்: பாரதிராஜாவுக்கு தடை!

கடந்த ஜூன் மாதம் இந்த சங்கத்தின் தலைவராக டைரக்டர் பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இத்தேர்வை எதிர்த்து இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
முறையாக தேர்தல் நடத்தாமல் இந்தப் பதவிக்கு பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, வரும் 12-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் ஆர்.சி.சக்தி அதே கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். தனி அதிகாரி நியமித்து தேர்தலை முறையாக நடத்தவேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
7வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி கிருபாநிதி இந்த வழக்கை விசாரித்தார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பாரதிராஜா சங்க தலைவராக பதவி வகிக்கக் கூடாது என தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.
இயக்குனர் சங்கத் தேர்தலை 2 மாதத்திற்குள் நடத்த வேண்டும், இதற்காக வக்கீல் ஆர்.வித்யா தனி அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக வக்கீல் ஜெயசுதா நியமிக்கப்படுகிறார் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இவர்களுடன், தேர்தல் அதிகாரியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் சங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக தேர்தல் நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











