தனுஷுக்கு 'ஆள்' கிடைச்சாச்சு!

பஞ்சாபிலிருந்து சாப்ட்வேர் என்ஜீனியரான தப்சியை ஆடுகளம் படத்திற்காக கூட்டி வந்துள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கும் புதிய படம்தான் ஆடுகளம். மதுரைப் பின்னணியைக் கொண்ட படம். தனுஷுக்கு இதில் ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை புக் செய்தனர். ஆனால் அவர் கொடுத்த கால்ஷீட்டை தனுஷும், வெற்றிமாறனும் சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறி விலகிக் கொண்டார் திரிஷா (சிம்புவுடன் ஜோடியாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது)
இதையடுத்து அடுத்த ஹீரோயினைத் தேடி வந்தனர். யாரும் தகையவில்லை. இந்த நிலையில்தான் கிடைத்துள்ளாத் தப்சி.
தப்சி பற்றி சொல்லுங்களேன் என்று வெற்றி மாறன் வாயைக் கிளறியபோது, தப்சி திரைத் துறைக்குப் புதியவர். முற்றிலும் புதுமுகமாக பார்க்கலாம் என தீர்மானித்து தேடி வந்தோம். அதில் கிடைத்தவர்தான் தப்சி.
இப்படத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறாராம் தப்சி.
படத்தை ஜனவரி 14ம் தேதி பொங்கலுக்கு திரைக்குக் கொண்டு வரவுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











