தஷியின் 'கலைஞர் கவசம்'!

தமிழக முதல்வர் கருணாநிதியின் 85வது பிறந்த நாள் கொண்டாடப்படும் ஜூன்- 3ம் தேதி இந்த 'கலைஞர் கவசம்' இசை ஆல்பத்தை முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம் வழங்கவுள்ளனர்.
மாணவன் நினைத்தால் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகும் பி.கே.சுபீஷ் பாடியுள்ள இந்தப் பாடலை எழுதியிருப்பவர் திப்பு என்கிற சை.சா.உஸ்மான். இவர் ஜெயகாந்தனிடம் 15 ஆண்டுகளுக்கும் மேல் உதவியாளராக பணியாற்றிவர்.
புதுக்கோட்டை வாட்டாக்குடியைச் சேர்ந்தவரான தஷி, தந்த்ரா என்ற மலையாளப் படத்துக்கு பின்னணி இசை அமைத்ததற்காக கேரள அரசின் விருது பெற்றவர்.
தற்போது, மாணவன் நினைத்தால், பயணங்கள் முடிவதில்லை உள்பட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
கணியத் தமிழ் சாஃப்ட்வேர் நிறுவன அதிபர் கபிலன் இந்த இசை ஆல்பத்தை தயாரித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications