twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தூங்கா நகரம்'.. அழகிரி மகனின் அடுத்த படம்!

    By Staff
    |

    Thoonganagaram
    தமிழ் சினிமா தயாரிப்பின் சூட்சுமம் கிட்டத்தட்ட பிடிபட்டுவிட்டது மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதிக்கு.

    வாரணம் ஆயிரம் என்ற தண்டமான படத்தை வாங்கி திரையிட்டு பாடம் கற்றுக் கொண்ட தயாநிதி, அடுத்த படமாக சின்ன பட்ஜெட்டில் 'தமிழ் படம்' என்று ஒரு படம் எடுத்துள்ளார். இந்த வாரம் வெளியான படங்களில் பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம்தான் தேறியிருக்கிறது.

    அடுத்து அஜீத்தை வைத்து படமெடுக்கும் தயாநிதி, இப்போது புதிய படம் ஒன்றை அறிவித்துள்ளார்.

    தனது தந்தை அழகிரியின் பிறந்த நாளையொட்டி ஆரம்பித்துள்ள படம் இது. மதுரையின் மைந்தன் அல்லவா... அதனால் தந்தையின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் படத்துக்கு 'தூங்கா நகரம்' என்று பெயர் சூட்டியுள்ளார் தயாரிநிதி. கதையும் முழுக்க முழுக்க மதுரை நகரைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய இயக்குநர் கவுரவ் இயக்குறார். இவர் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர்.

    'பசங்க' படத்தில் நடித்த விமல், 'நாடோடிகள்' படத்தில் கலக்கிய பரணி, 'ரேணிகுண்டாவில்' அமைதியாக வந்து அமர்க்களம் பண்ணிய நிஷாந்த் (குண்டு பார்ட்டி) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அஞ்சலி நாயகியாக நடிக்கிறார்.

    படத்தின் இயக்குநரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    சுந்தர்.சி பாபு இசையமைக்க, விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

    இந்தப் படத்தின் துவக்க விழாவும் மதுரையிலேயே நடந்தது. இன்று அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் அமர்க்களமாக நடந்தது 'தூங்கா நகரம்' துவக்க விழா.

    முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் குத்துவிளக்கு ஏற்ற, அழகிரியின் மனைவி காந்தி அழகிரி 'க்ளாப் போர்டு' அடித்தார். அழகிரியின் மகள்கள் கயல்விழி, செல்வி ஆகியோரும் நிகழ்ச்சியி்ல் பங்கேற்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X