பாத் திரைப்பட விழாவில் ரஜினியின் எந்திரன்!
பிரிட்டனின் பாத் திரைப்பட விழாவில் பங்கேற்கிறது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்றுள்ள எந்திரன்.
கடந்த 20 ஆண்டுகளாக பிரிட்டனில் நடக்கும் பெரிய சர்வதேச திரைப்பட விழாக்களுள் ஒன்று 'பாத் திரைப்பட விழா'.
இந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கும் இந்த திருவிழாவில், லிட்டில் தியேட்டர் எனும் அரங்கில் நவம்பர் 13-ம் தேதி, எந்திரன் (தமிழ்) திரையிடப்படுகிறது.
ஆங்கில சப் டைட்டில்களுடன் கூடிய தமிழ் பதிப்பையே இங்கு திரையிடுகின்றனர். இப்படத்துக்கு 7 மற்றும் 5 பவுண்டுகள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பாடல் காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் குறைக்கப்பட்டு, இரண்டரை மணி நேரப் படமாக பாத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது எந்திரன்.
கேன்ஸ், பெர்லின், ஷாங்காய் மற்றும் கனடிய திரைப்பட விழாக்களிலும் எந்திரன் பங்கேற்கவிருப்பதாகவும், அதற்கான அழைப்புக் கடிதங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











