எந்திரன் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்துடன் ரஜினிகாந்த் மலேசியாவுக்குக்

எந்திரன் பட ஆடியோ வெளியீடு நாளை மலேசியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக வரலாறு காணாத அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.
ரஜினி படம் ஒன்றின் ஆடியோ விழா பிரமாண்டமான அளவில் வெளிநாடு ஒன்றில் நடைபெறுவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தோடு பங்கேற்கிறார். இதற்காக அவர் குடும்பத்தோடு மலேசியா கிளம்பிச் சென்றுள்ளார். அதேபோல இயக்குநர் ஷங்கர், படப்பிடிப்புக்குழுவினரும் மலேசியா புறப்பட்டுப் போயுள்ளனர்.
அதேபோல படத் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், அவரது தம்பியும், மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் ஆகியோர் இன்றுமலேசியா கிளம்பிச் சென்றனர்.
Comments
இயக்குநர் ஷங்கர் எந்திரன் ஆடியோ வெளியீடு ரஜினிகாந்த் மலேசியா பயணம் enthiran audio launch malaysia visit rajinikanth


Click it and Unblock the Notifications