சுலக்ஷனாவை மிரட்டவில்லை-பைனான்சியர் மறுப்பு

பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுலக்சனா. தற்போது அம்மா வேடத்தில் சினிமாலும், டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இவர் சென்னை போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமாரனிடம் கொடுத்த புகாரில் வடபழனியை சேர்ந்த மாடசாமியிடம் கடந்த ஒரு லட்சம் கடன் வாங்கினேன். இதுவரை வட்டியாக மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கொடுத்துள்ளேன். ஆனால் மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வட்டியாகவும், அசல் தொகையான ரூ.1 லட்சத்தையும் தர வேண்டும் என்று மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார். புகார் கூறப்பட்ட பைனான்சியர் மாடசாமி நெல்லையைச் சேர்ந்தவர். தன் மீதான புகார் குறித்து மாடசாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடிகை சுலக்சனா தனது மகளை ஆஸ்திரேலியாவில் படிக்க வைக்க கடந்த ஜூலை மாதம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு அவர் கொடுத்த செக்குகளில் வங்கிகளில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டன.
இதனால் கடந்த 22ம் தேதி முழு பணத்தையும் கொடுத்து விடுவதாக என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து நான் எனது சொந்த ஊரான பாளையங்கோட்டைக்கு வந்து விட்டேன்.
இந்த சமயத்தில் தான் நடிகை சுலக்சனா என் மீது கந்து வட்டி கேட்பதாகவும், ரவுடி கும்பலை வைத்து மிரட்டுவதாகவும், போலீசில் புகார் செய்துள்ளார். அவர் கூறுவதை போல கந்து வட்டி வசூலிக்கவும், ரவுடிகளை விட்டு மிரட்டவும் இல்லை.
இந்தப் புகாரை யாரோ தூண்டுதலின் பேரில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி அவரது புகாரை எதிர்கொள்வேன் என்றார்.


Click it and Unblock the Notifications











