twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜாதான்! -இயக்குனர் பி.வாசு

    By Shankar
    |

    சென்னை: இசை என்றால் என்றைக்கும் என்னைப் பொருத்தவரை இளையராஜாதான், என்றார் இயக்குநர் பி வாசு.

    பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு முதல் இசை குறுந்தட்டை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பெற்றுக் கொண்டார்.

    இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா,நாயகி சதா,மற்றொரு நாயகி திவ்யா பத்மினி, இயக்குனர் வாசுவின் மகன் இளம் நடிகர் ஷ‌க்தி, நடிகர் எம் எஸ் பாஸ்கர், தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

    விழாவில் இயக்குனர் பி.வாசு பேசுகையில், "ஒரு படத்திற்கு வியாபாரமும் விளம்பரமும் அவசியம். என்னுடைய ஹீரோ ஆர்.கே மிகவும் புத்திசாலித்தனமாக இந்த இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்.

    'வேலை கிடைச்சிடுச்சி' படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமான திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். நாயகன் ஆர்.கே கதைக்கேற்றெ வகையில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கார்த்திக் மிகவும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அறிமுகம் செய்த‌ மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்கி பிறகு என் படத்தில் நடித்துள்ளார்.

    ராஜாதான்...

    நான் எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருந்தாலும் இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜாதான். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இளையாராஜா பாணியில் ஒரு மெலடி பாட்டு போட்டிருக்கிறார். சின்னதம்பியில் இளையாராஜா போட்டுத் தந்த 'போவோமா ஊர்கோலம்...' மாதிரி இந்த பாட்டும் ஹிட்டாகும். மற்றபடி படங்க‌ளை போலவே எல்லா வகையான பாடல்களும் இதில் உள்ளன," என்றார்.

    நாயகி சதா பேசும் போது இயக்குனர் பி.வாசுவின் படத்தில் நடிக்க வேண்டும் எனப்து தனது விருப்பம். ஆனால் ஒரு மூறை வாய்ப்பு வந்தும் அது நழுவி போய்விட்டது. இப்போது புலிவேஷம் படம் மூலம் அந்த ஆசை நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

    மற்றொரு நாயகி திவ்யா பத்மினி பேசும் போது இளம் நடிகையான தனக்கு இயக்குனர் வாசு மிகவும் ஆழமான பாத்திரம் தந்துள்ளார் என்று நன்றியோடு கூறினார்.

    இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேசும் போது, "இயக்குனர் பி வாசு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தந்து நீண்ட நாள் கனவு" என்று கூறினார்.

    "பி.வாசு படங்களில் இளையராஜா சார் பாடல்கள் மிக விஷேசமாக இருக்கும். இதைப் பார்க்கும்போது, நாமும் வாசு சாரின் ஒரு படத்துக்கு இசையமைக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன். அந்தக் கனவு புலிவேஷம் மூலம் நிறைவேறிவிட்டது. வழக்க்கமாக ஸ்ரீ காந்த் தேவா என்றால் குத்துபாட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால் புலிவேஷத்தில் என்னுடைய மெலோடி பாட்டு பேசப்படும்" என்றார் ஸ்ரீகாந்த் தேவா.

    ந‌டிகனாக அல்லாமல் அப்பவின் ரசிகனாக வ‌ந்திருக்கிறேன் என்று இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷ‌க்தி. அவன் இவனில் வில்லனாக நடித்த ஆர்.கேவின் நடிப்பை பாராட்டிய ஷ‌க்தி அந்த படத்தில் அவர் ராவணன் என்றால் இதில் கர்ணன் என்று பாராட்டு தெரிவித்தார்.

    தயாரிப்பாளரும் நாயகனுமான ஆர்.கே .ந‌னறி கூறினார்.

    முன்னதாக சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்ட ஸ்குவாஷ் வீராங்கனை, "இது தான் பங்கேற்கும் முதல் திரைப்பட நிகழ்ச்சி. இந்த வாய்ப்புக்காக மகிழ்ச்சியடைவதாக" தெரிவித்தார்.

    English summary
    Veteran Director P Vasu says that he is one of the ardent fan of Isaignani Ilayaraja. Released the audio CD's of RK's Pulivesham, Vasu praised the film's music director Sri Kanth Deva for composed a song in Ilayaraja's style.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X