மேலும் ஒரு மாதம் தள்ளிப் போன முரட்டு சிங்கம்!

லாரன்ஸ், லட்சுமி ராய், சந்தியா, பத்மப்ரியா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள கௌபாய் ஸ்டைல் படம் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்.
இந்தப் படம் பொங்கலுக்கு வரும் என்று கூறப்பட்டு பின்னர் பிப்ரவரிக்கு தள்ளிப் போனது. பிறகு மார்ச் 26-ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் என்றனர். ஆனால் ரிலீசாகவில்லை. இந்த நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் என விளம்பரங்கள் வெளியாகின. இப்போது மே மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
சற்று பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படத்தை முழுமையான விடுமுறை நாளில்தான் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் விரும்புவதாலேயே இந்த தள்ளிப் போடல் என்கிறார்கள். அப்போதுதான் குடும்பம் குடும்பமாக இந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்பது அவர் கணக்கு.
இப்போதைய நிலவரம்: மே 7-ம் தேதி வெளியாகிறது இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்!
Comments
இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் மே ரிலீஸ் லாரன்ஸ் irumbukkottai murattu singam postponed summer release


Click it and Unblock the Notifications