'பர்ந்து' அடிக்கும் குஷ்பு 'பாட்டி'!

குஷ்பு கன்னடத்தில் குடு குடு பாட்டி வேடத்தில் நடித்த படம்தான் மேஜிக் அஜ்ஜி. இந்தப் பாட்டி மந்திர, தந்திரங்கள் தெரிந்த அமானுஷ்ய பாட்டி. இளம் வயது ராஜகுமாரி குஷ்புவை சிலர் வஞ்சகமாக கொன்று விடுகிறார்கள்.
பாட்டி வேடத்தில் வரும் குஷ்புவின் ஆவி, தன்னைக் கொன்ற சதிகாரர்களை விரட்டி விரட்டிக் கொல்கிறதாம். இதுதான் மேஜிக் அஜ்ஜியின் கதை.
கன்னடத்தில் ஹிட் ஆன இப்படத்தை தற்போது தமிழில் தந்திரப்பாட்டி என்ற பெயரில் டப் செய்கிறார்கள்.
நம்ம ஊர் தேவிப்பிரியாவும் இப்படத்தில் தலை காட்டியிருக்கிறார். படம் முழுக்க ஆவித்தனங்களை கிராபிக்ஸ் மூலம் நேர்த்தியாக காட்டி பயமுறுத்தியிருக்கிறார்களாம்.
விரைவில் தமிழ் ரசிகர்களை பயமுறுத்த வருகிறாராம் தந்திரப்பாட்டி.
Comments


Click it and Unblock the Notifications