twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதுமுகங்களைத் தேடும் லேகா ரத்னகுமார்

    By Staff
    |

    Lekha Rathnakumar
    கதை திரைக்கதை வசனத்தை பக்காவாக ஹாலிவுட் ஸ்டைலில் தயார் செய்துவிட்டு, அந்த ஹாலிவுட்டுக்கே போய் அதைப் படமாக்கவும் தயாராகிவிட்டார் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் லேகா ரத்னகுமார்.

    'ஏதோ விளம்பரத்துக்காக ஹாலிவுட் ஸ்டைல்' என்று சொல்கிறாரோ என நினைக்காதீர்கள்... திரைக்கதையை முழுமையாக எழுதி, ஒவ்வொரு காட்சிக்கும் பொருத்தமான படங்களை ரெஃபரன்ஸுக்கு எடுத்து வைத்துள்ளார்.

    ஆரம்பத்திலேயே இந்தப் பணிகளை முடித்து விட்டதால் இவர் தனது கதையைப் படமாக்க மிகக் குறைந்த நாட்கள் இருந்தாலே போதும் அல்லவா... இதுதான் ஹாலிவுட் பாணி. மிகப் பிரமாண்டமான படத்தைக் கூட அங்கே 40 நாட்களில் எடுத்து முடிப்பது இப்படித்தான்.

    ஹாலிவுட்டின் யுனிவர்சல் ஸ்டுடியோவில் இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்குகிறார். படத்தின் 90 சதவிகித காட்சிகள் நியூயார்க், லாஸ் வேகாஸ் என அமெரிக்காவின் இயற்கை மற்றும் செயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் இந்தப் படம் ஷூட் செய்யப்படுகிறது.

    லாஸ் ஏஞ்சல்ஸின் பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் நாயகன், நாயகி தொடர்பான காட்சிகள் படமாகின்றன. இந்தப் பகுதியில்தான் ஹாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகள் அமைந்துள்ளன.

    ஏற்கெனவே ஒருமுறை அமெரிக்காவுக்கு விசிட் அடித்து படப்பிடிப்பு தொடர்பான பல விஷயங்களை முடிவு செய்துவிட்ட லேகா ரத்னகுமார், மீண்டும் ஒருமுறை அந்த இடங்களுக்குச் சென்று ஹாலிவுட் நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்வது முதலான இறுதிக் கட்டப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்புகிறார். அதன் பிறகு படப்பிடிப்பு துவங்குகிறது. ஒரே கட்டமாக வெளிநாட்டு போர்ஷனை முடித்துக் கொண்டு, ஹாலிவுட்டிலேயே போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் சவுன்ட் டிசைனிங்கையும் செய்யவிருக்கிறார்கள்.

    புதுமுகங்கள் அணுகலாம்!

    இந்தப் படத்தில் பிரபல முகங்களை நடிக்க வைக்கவே முதலில் முடிவு செய்திருந்தார் லேகா. சில முன்னணி நடிகர்களிடமும் பேசி முடித்த நிலையில், படத்தின் கதையை பிரபலங்களின் இமேஜ் பாதிக்கும் என்பதால் முற்றிலும் புதிய முகங்களாகவே அறிமுகம் செய்துவிடும் முடிவுக்கு வந்துள்ளார். இந்தப் புதுமுகங்களைத் தேர்வு செய்த பின்னர் அவர்களுக்கு ஒரு மாதம் பயிற்சி முகாமும் நடத்தவிருக்கிறார்.

    "இவ்வளவு பெரிய படத்தை முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கக் காரணமே, கதையின் மீதுள்ள அழுத்தமான நம்பிக்கைதான். இந்தக் கதையை ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டுடியோ அதிபர்களிடமும் சொன்னேன். அவர்களால் கடைசி வரை இந்தக் கதையை யூகிக்க முடியவில்லை.

    அதேபோல எங்கள் சொந்த ஊரான விருதுநகரில் உறவினர்கள் அனைவரையும் அழைத்து ஒரு மினி கூட்டம் போல அமர வைத்து இந்தக் கதையைச் சொன்னபோது, அத்தனை பேரும் ஆர்வம் மிகுதியில் அடுத்த சீன் என்ன என்று கேட்டார்கள். இதுதான் எனது நம்பிக்கையின் அடிப்படை.

    இப்படி ஒரு வித்தியாசமான கதை கையிலிருக்கும்போது, ஹீரோக்களை மட்டும் நம்பி இறங்க வேண்டிய அவசியம் என்ன?", என்று கேட்கிறார் லேகா.

    எனவே படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு எந்தவித சிபாரிசு மற்றும் பாரபட்சமும் இல்லாமல் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் [email protected] எனும் மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

    முழுக்க முழுக்க ரெட் கேமராவில் ஷூட் செய்யவிருக்கும் இந்தப் படத்துக்கு ஜப்பானைச் சேர்ந்த கெய்கோ நகாகரா ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார். லேகாவின் கதையைக் கேட்ட கெய்கோ, 'இப்படி ஒரு சிறந்த ஸ்கிரிப்டுக்கு ஒளிப்பதிவு செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்றாராம்.

    கதையின் ஆரம்ப காட்சிகள் மட்டும் குற்றாலத்தில் படமாகின்றன. படத்தின் ஷூட்டிங் தொடர்பான அனைத்துப் பணிகளையும் 'சன்செட் லொகேஷன்ஸ்' எனும் அமெரிக்க நிறுவனத்தின் ஷெர்ரி மில்லிகன் கவனிக்கிறார்.

    படத்தின் கதை வசனம் எழுத்தாளர் சித்ரலேகா. திரைக்கதை, இசை மற்றும் இயக்கம் லேகா ரத்னகுமார். மக்கள் தொடர்பு சுரா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X