'கோவா'வில் அமன்டா?

வெங்கட் பிரபு அடுத்து இயக்கவுள்ள படம் கோவா. இப்படத்தில் மொத்தம் நான்கு நாயகர்கள். ஜெய், வைபவ், பிரேம்ஜி, சிவா ஆகியோர் அவர்கள். 3 நாயகிகள். அதில் சினேகா, ஜெனீலியா ஆகியோர் இரு ஹீரோயின்களாக முடிவாகி விட்டனர். 3வது கேரக்டரை வெளிநாட்டுப் பெண்ணாக வைத்துள்ளார் பிரபு.
இந்தக் கேரக்டருக்குத்தான் ஆள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். முதலில் ஆல்பாவை அணுகினர். அவரோ பல கோடி சம்பளம் கேட்டதால் மலைத்துப் போய் ஆல்பா, வேண்டாம்பா என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.
இந்த நிலையில் இப்போது மம்மா மியா படப் புகழ் அமன்டாவை அணுகியுள்ளனராம். சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம்தான் மம்மா மியா.
இப்போதைய பொருளாதார கவலைகளை முற்றிலும் மறந்து ஜாலியாக ரசிக்கக் கூடிய படம் என்றே இப்படத்திற்கு ஹாலிவுட்டில் விளம்பரம் செய்தார்கள். அந்த அளவுக்கு குதூகலமான படம்.
மம்மா மியா படத்தில் சோஃபி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் அமன்டா. பார்ப்பதற்கு அப்படியே டால்பி பொம்மை போலவே இருக்கும் அமன்டாவை கோவா யூனிட் அணுகியுள்ளதாம்.
பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, கனிந்தால் தகவல் சொல்கிறோம் என்கின்றனர் கோவா யூனிட்டார்.
அமன்டாவும் பெரிய 'அமவுன்ட்'டாக கேட்டால் என்ன செய்வார்கள்??


Click it and Unblock the Notifications











