வட இந்தியாவில் தமிழில் 'வெள்ளித்திரை'

மோகன்லாலின் உதயனு தாரம் படத்தின் ரீமேக்தான் வெள்ளித்திரை. மோசர்பெயர், பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ், மிர்ச்சி மூவிஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்தனர்.
கோவிகா, பிரகாஷ்ராஜ், லட்சுமிராய், பிரதிவிராஜ் ஆகியோர் நடிக்க பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆன இப்படம் தமிழில் சோடை போகவில்லை.
இந்த நிலையில் இப்படத்த ஆங்கில சப் டைட்டிலுடன் வட இந்தியாவில் வெளியிடப் போகிறது மிர்ச்சி மூவிஸ். புனே, மும்பை, கோவா, கொல்கத்தா, டெல்லி, பரோடா, நாக்பூர், ஜெய்ப்பூர், சண்டிகர் ஆகிய நகரங்களில் மே 2ம் தேதி வெள்ளித்திரை, திரைக்கு வருகிறது.
இதுகுறித்து மிர்ச்சி மூவிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முனீஷ் பூரி கூறுகையில், அனைத்து சினிமா ரசிகர்களும் புரிந்து கொள்ளக் கூடிய சப்ஜெக்ட்தான் வெள்ளித்திரை. எனவேதான் இதை வட இந்தியாவில் திரையிடத் தீர்மானித்தோம்.
மேலும் வட இந்தியாவில் உள்ள தமிழர்களும் இப்படத்தை ஆர்வத்துடன் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பூரி.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், விஜயின் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், பிருத்விராஜ், கோபிகா, லஷ்மி ராய், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











