பிப். 6ல் நான் கடவுள்!

வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பில் சீனிவாசன் தயாரித்துள்ள இந்த பிரமாண்டமான படைப்பை பிரமிட் சாய்மீரா நிறுவனம் உலகெங்கும் வெளியிடுகிறது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகத் தயாரிப்பிலிருந்துவரும் திரைப்படம் பாலாவின் நான் கடவுள். இதன் முதல் தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன்.
ஆனால் பாலாவின் 'நிதானம் பிளஸ் பர்பெக்ஷன் காஸ்ட்'டுக்கு அவரால் ஈடுகொடுக்க முடியாததால், கால்வாசிப் படத்திலேயே விலகிக்கொள்ள, மீதிப்படத்தை சிவஸ்ரீ சீனிவாசனின் வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரித்து முடித்தது.
இளையராஜா இசையில் புத்தாண்டு அன்று வெளியான இந்தப் படத்தின் பாடல்கள் இசை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகின்றன.
இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் கே.எஸ். சீனிவாசன்.
வருகிற வெள்ளிக்கிழமை பிப்ரவரி 6-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது நான் கடவுள். சென்னை நகரில் மட்டும் 10 திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகம் முழுக்க பிரமிட் சாய்மிரா நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.


Click it and Unblock the Notifications











