கோவிந்தா போட்டியிட மறுப்பு-நக்மாவுக்கு வாய்ப்பு!

மராட்டிய மாநில முதல்-மந்திரி அசோக் சவான், மத்திய மும்பையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் இத்தகவலைக் கூறினார்.
"வட மும்பை தொகுதி எம்.பி.யும், நடிகருமான கோவிந்தாவிடம் வரும் தேர்தலில் போட்டியிட விருப்பமா என கேட்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடப் போவதில்லை என்று கூறி விட்டார். இந்த தொகுதியில் நடிகை நக்மா போட்டியிட விரும்புகிறார். இதற்காக அவர் விண்ணப்பமும் செய்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது,' என்றார்.
இதன் மூலம் இந்த இரு தொகுதிகளில் ஒன்றில் நடிகை நக்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.
அப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம் நாயக்கை எதிர்த்து நடிகை நக்மா போட்டியிட வேண்டி வரும்.
Comments
இந்தியா கோவிந்தா சினிமா தேர்தல் 2009 நக்மா வட மும்பை cinema election 2009 govinda mumbai nagma ram nayak


Click it and Unblock the Notifications