twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடைகள் கடந்து.. காதலில் விழுந்தேன் மதுரையில் ரிலீஸ்!

    By Staff
    |

    Nagulan and Sunaina
    மதுரை: பெரும் தடைகளை கடந்து ஒருவழியாக மதுரையிலும் ரிலீசாகிவிட்டது சன் பிக்சர்ஸின் சூப்பர் ஹிட் படமான காதலில் விழுந்தேன்.

    நகுல்-சுனைனா நடித்துள்ள இந்தப் படத்தை பிவி பிரசாத் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக் கிழமையன்று தமிழகம் முழுவதிலும் வெளியானது. ஏற்கனவே படத்தில் இடம் பெற்றுள்ள நாக்க மூக்க பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி விட்டதால் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

    இதனால் திரையிட்ட இடங்களிலெல்லாம் இளசுகள் கூட்டம் கட்டி ஏறியது. ஆனால் மதுரை, ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நாக்க மூக்கவை ரசிக்கும் பாக்கியம் ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை.

    அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்களின் மிரட்டல் காரணமாக இந்தப் படத்தைத் திரையிட இந்த மாவட்டங்களில் யாரும் முன் வரவில்லை என சன் பிக்சர்ஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதுகுறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. காதலில் விழுந்தேன் திரைப்படத்தை திரையிடுவதை யாரும் தடுக்கக் கூடாது என்றும், அப்படி தடுக்கப்படும் பகுதிகளில் செய்தி விளம்பரத்துறை அதிகாரிகள் உடனிருந்து படத்தைத் திரையிட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.

    இதைத் தொடர்ந்து, மதுரையில் 6 திரையரங்குகளில் நேற்று 'நாக்க முக்க' ஒலிக்கத் துவங்கியது.

    இதுகுறித்து இயக்குநர் பிவி பிரசாத் கூறியதாவது:

    மதுரையில் இந்தப் படம் வெளியானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய வெற்றி இதுதான். மதுரை ரசிகர்கள் படத்தின் பாடல் காட்சிகளில் உற்சாகம் தாளாமல் ஆட்டம் போடுவதைப் பார்த்து ரசித்தேன் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X