முடிதிருத்துவோரை இழிவுபடுத்தவில்லை-பி.வாசு

By Staff

Vadivelu in Kuselan
சென்னை: குசேலன் படத்தில் முடி திருத்துவோரை இழிவுபடுத்தும் வகையில் சி்த்தரிக்கவில்லை என்று இயக்குநர் பி.வாசு தெளிவுபடுத்தியு்ளார்.

குசேலன் படத்தில், முடி திருத்தும் தொழிலாளர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி, அந்த படத்தின் இயக்குநர் பி.வாசுவின் வீட்டு முன்பு முடி திருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து பி.வாசு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:

சில முடி திருத்தும் தொழிலாளர்கள் குசேலன்' படத்தில், வடிவேல் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகளில் அவர்களை தப்பாக காண்பித்ததாக போராட்டம் நடத்துவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

இதுபோன்ற பிரச்சினைகளில், முதலில் சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம் விளக்கம் கேட்டுவிட்டு, விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

ஆனால் இப்படி எதுவும் செய்யாமல், எடுத்தவுடன் போராட்டம் என்று தொடங்கி இருப்பது என் போன்ற கலைஞர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு போலி டாக்டர், போலி சாமியார் என்பது போல்தான் வடிவேல் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கடைசியில் போலீஸ் வந்து தவறாக தொழில் செய்யும் அவர்களை தண்டிக்கும் காட்சியும் உண்டு. முடி திருத்தும் தொழிலாளர்களை மிக உயர்வாக காட்டிய படம்தான், குசேலன்.

படத்தின் ஆரம்பமே, கத்தரிக்கோல் ஒரு நட்சத்திரத்தை உருவாக்குவதுபோல் காட்டப்பட்டுள்ளது. ஒரு முடி திருத்தும் தொழிலாளி, சினிமா சூப்பர்ஸ்டாரை உருவாக்குகிறார் என்பது அதன் பொருள்.

கடையில் தொழில் சரியில்லை. அதனால் குழந்தைகளுக்கு பீஸ்' கட்ட முடியவில்லை என்றாலும், சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவராக பசுபதி கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகளிலும், வசன காட்சிகளிலும் முடி திருத்தும் தொழிலாளர்களை உயர்த்தியும், புகழ்ந்தும் எழுதியுள்ளோம்.

சிறு வயதில் தன் நண்பனுக்கு உதவி செய்ததால், இன்று அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்து எந்த கைமாறும் எதிர்பாராத உயர்ந்த குணமுடையவராக ஒரு ஏழை முடி திருத்தும் தொழிலாளியை காட்டியுள்ளோம்.

எந்த ஒரு காட்சியும், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரமுகியிலும் சரி, உழைப்பாளியிலும் சரி, குசேலன் படத்திலும் சரி, என் படங்களில் எல்லா தொழிலாளர்களையும் உயர்த்திதான் பாடல் காட்சிகள் கூட அமைத்துள்ளேன் என்று கூறியுள்ளார் வாசு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X