மகனை வைத்து படம் எடுத்து 'மெலிந்தவர்கள்'!!

SV Sekar
"குண்டாக இருக்கிறோமே என்று கவலைப்படாதீர்கள். மகனை வைத்து சொந்தப் படம் எடுங்கள். தானாகவே மெலிந்து விடுவீர்கள்" என்றார் பாண்டியராஜன்.

மறைந்த பட அதிபர் கே.ஆர்.பாலனின் பேரனும், நடிகை சங்கீதாவின் சித்தி மகனுமான பரிமள் கதாநாயகனாக நடித்துள்ள 'ஓடிப்போலாமா' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சாந்தம் தியேட்டரில் நடந்தது.

பாடல்களை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

விழாவில் இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேச்சு அரங்கை சிரிப்பலைகளால் குலுங்க வைத்தது.

படம் எடுங்க...

அவர் கூறுகையில், "இந்த படத்தின் தயாரிப்பாளர் உஷா, ரொம்ப குண்டாக இருந்தார். என் மனைவிக்கு அவர் தோழி. இரண்டு பேரும் சந்தித்துக்கொள்ளும் போதெல்லாம் 'எப்படி உடம்பை ஸ்லிம்மாக்கறது'? என்பதைப் பற்றித்தான் பேசிக்கொள்வார்கள். சமீபத்தில் அவர் எங்க வீட்டுக்கு வந்தபோது, ரொம்ப மெலிந்து விட்டிருந்தார்.

எப்படி மெலிந்தீர்கள்? என்று கேட்டேன். "படம் எடுக்கிறேன் அல்லவா?" என்றார் சிரித்துக் கொண்டே. அவர் சொன்னதில் ரொம்பவே உண்மை இருந்தது.

உண்மையிலேயே எந்த சிகிச்சையும் இல்லாமல், உடல் மெலிய வேண்டும் என்றால், உடனே படம் எடுங்கள். படம் எடுத்தால், உடம்பு தானாக மெலிந்து விடும்.

வீட்டில், பையனை 'ஹீரோ'வாக வைத்துக்கொண்டு நான் படுகிற பாடு இருக்கிறதே... என் குரு பாக்யராஜுக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. நான், அவரைப் பார்த்து ஆறுதல் அடைகிறேன். அவர், என்னைப்பார்த்து ஆறுதல் அடைகிறார்...", என்றார்.

அடுத்துப் பேசிய எஸ்வி சேகர், "பாண்டியராஜன் சொன்னது உண்மைதான். நானும் ரொம்ப குண்டாத்தான் இருந்தேன். என் மகனை வைத்து படம் எடுத்தேன். மெலிந்து போனேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X