நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் தயாராகும் முகூர்த்தப் பட்டு!!

By Sudha

Nayantara
முறைப்படி விவாகரத்து கிடைக்கும் மாதமான ஜூன் வரை கூட பொறுக்க முடியவில்லை போலிருக்கிறது நயன்தாரா மற்றும் பிரபு தேவாவால்.

இப்போதே முகூர்த்தத்துக்கு நாள் குறித்து, அதற்கான ஏற்பாடுகளில் முமும்முரமாகிவிட்டனர்.

நயன்தாரா-பிரபுதேவா திருமணத்துக்கான தடை நீங்கியுள்ளது. விவாகரத்துக்கு மனைவி ரம்லத் சம்மதித்துவிட்டார். ஜூன் மாதம் இருவருக்கும் முறைப்படி விவாகரத்து வழங்கப்படுகிறது.

இன்னொரு புறம் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. திருமணத்தை சென்னை நட்சத்திர ஓட்டலில் விமரிசையாக நடத்த பிரபுதேவா முடிவு செய்துள்ளார். ரம்லத்துடனான திருமணம் ரகசியமாக நடந்தது. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் இந்தத் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தப் போகிறாராம்.

திருமணத்துக்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் நிறைய பேர் அழைக்கப்பட உள்ளனர்.

நயன்தாராவுக்காக காஞ்சீபுரத்தில் முகூர்த்தப்பட்டுக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். முழுக்க தங்கஜரிகையுடன் பல லட்சம் மதிப்பில் இதைச் செய்கிறது பிரபல ஜவுளி நிறுவனம்.

திருமணத்துக்கு பிறகு சென்னையில் குடியேறுகிறார்கள். ஏற்கனவே இங்கு இருந்த வீட்டை ரம்லத்துக்கு கொடுத்து விட்டதால் புது வீடு பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X