ஹாலிவுட்டில் பாடகராகும் ஏ.ஆர். ரஹ்மான் மகன்!

ஆம்... ஏ ஆர் ரஹ்மானின் 6 வயது மகன் ஆலிம் ஒரு பாடகராக தனது தந்தையின் இசையில் பாடுகிறார். அதுவும் தமிழில் அல்ல... எடுத்த எடுப்பிலேயே ஹாலிவுட்டில்!
'கப்பிள்ஸ் ரீட்ரீட்' எனும் ஹாலிவுட் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இப்போது இசையமைத்து வருகிறார். பீட்டர் பிரிங்ஸ்லே இயக்கும் இந்த ரொமாண்டிக் காமெடி படத்தில் வின்ஸ் வான், க்ரிஸ்டன் பெல் மற்றும் ஜாஸன் பேட்மேன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு முழுப் பாடலையும் ஆலிம் பாடுகிறார். அந்த சூழலுக்கும், பாத்திரத்துக்கும் ஆலிம் குரல் மிகப் பொருத்தமாக அமைந்ததால் மகனைப் பாடவைத்துள்ளார் ரஹ்மான்.
ஏற்கெனவே தனது ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான ஜென்டில்மேனில் தனது சகோதரி மகன் ஜிவி பிரகாஷைப் பாடவைத்துப் பிரபலமாக்கினார் ரஹ்மான் என்பது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











