ஈழம்-ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதம்!

ரஜினி ரசிகர்கள் நடத்தும் இணைய தளம் விடுத்துள்ள வேண்டுகோளின் அடிப்படையில் இந்த உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது.
"ஆனால் இந்த அறப்போரில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என நாங்கள் வற்புறுத்தவில்லை. விருப்பமுள்ள ரஜினி ரசிகர்கள், உலகில் அவர்கள் எங்கிருந்தாலும் இந்த உண்ணாவிரதத்தில் தன் விருப்பமாகப் பங்கேற்றுக் கொள்ளலாம். இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதி, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பட வேண்டும் என்ற கூட்டுப் பிரார்த்தனையையும் செய்யலாம்" என்று அந்த இணைய தளம் அறிவித்துள்ளது.
'பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்' (அல்-குர்ஆன் 7:55) என்ற இறைவாக்குக்கு இணங்க இந்த உண்ணாவிரதத்தினை தன் விருப்பமாக முன்னெடுப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











