twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி-கமல், நடிகர்கள் நாளை 'பேசா' உண்ணாவிரதம்?

    By Staff
    |

    Kamal with Rajini
    இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை (சனிக்கிழமை) சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவழியாக சம்மதம் தெரிவித்துள்ளனர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும், ஒரு நிபந்தனையோடு!.

    உண்ணாவிரத்தில் மைக் கட்டி பேசக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. கிட்டத்தட்ட இதே நிபந்தனையை தமிழ அரசும் விதித்துள்ளது!!.

    இந்த நிபந்தனையின் நோக்கம் யாரும் புரிந்து கொள்ளக் கூடியதே.

    சில மாதங்களுக்கு முன் ஓகேனக்கல் பிரச்சனை தொடர்பான உண்ணாவிரததில் பங்கேற்ற நடிகர்கள் பலர், குறிப்பாக சத்யராஜ் உணர்ச்சி வசப்பட்டு, கட்டுப்பாடில்லாமல் சில வார்த்தைகளைப் பிரயோகிக்க, அதனால் டென்ஷனான ரஜினி 'உதைக்கணும்' என்றெல்லாம் பேசப்போய், அதற்கு குசேலன் என்ற படமே பலியானதும் அனைவருக்கும் தெரிந்த சமாச்சாரங்கள்.

    இன்னொரு பக்கம் ராமேஸ்வரம் பேரணியில் வரம்பு மீறிப் பேசியதற்காக இயக்குநர்கள் சீமானும், அமீரும் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. தமிழக அரசுக்கும் இதனால் சில சங்கடங்கள் உருவாயின.

    பெரிய நடிகர்கள் என்ன பேசினாலும் அது அரசியலாக்கப்படுவதால், இந்த முறை இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நாளை நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மைக் வைத்துப் பேசுவதையே அடியோடு தவிர்த்துவிட்டால் என்ன? என நடிகர் சங்கத் தலைவர் சரத் குமாருக்கு யோசனை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

    ரஜினிக்கும் இந்த யோசனை சரியாகப் படவே, பேசச் சொல்லி வற்புறுத்தாதீர்கள் என்ற நிபந்தனையோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சம்மதித்துள்ளதாக, நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    அஜீத், விஜய் போன்ற நடிகர்களும் இந்த வகை 'பேசா உண்ணாவிரதப் போராட்டம்' பிரச்சனை இல்லாதது என நடிகர் சங்க நிர்வாகிகளிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    இதைவிட முக்கியமான விஷயம், நடிகர் சத்யராஜை அடக்கி வாசிக்குமாறு தமிழக முதல்வரிடமிருந்தே அறிவுரை வந்திருப்பதாக நடிகர் சங்கம் தரப்பில் கூறப்படுகிறது.

    பிரச்சினைக்குரிய எந்த விவகாரம் குறித்தும் நடிகர்கள் பேசவேண்டாம் என்றும், உணர்வைத் தெரிவித்தால் மட்டும் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் இனி தமிழக அரசு நடந்து கொள்ளாது என சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த 'அறிவுரை' அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, நாளை நடக்கும் உண்ணாவிரதத்துக்காக நடிகர் சங்க வளாகத்தில் பிரமாண்டமான மேடை போடப்பட்டுள்ளது.

    கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X