கேபிள் டிவியில் ரோஜாவின் ஆபாசப் படம்! - பிரச்சாரத்தில் பரபரப்பு

By Staff

Roja
ஆந்திர மாநில அரசியலில் தெலுங்கு தேசம் மகளிர் அணித் தலைவி ரோஜாவால் தினமும் ஒரு பரபரப்பு எழுந்த வண்ணம் உள்ளது. இந்த முறை நடிகை ரோஜாவின் ஆபாச படத்தை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் எதிர்தரப்பினர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரிகிரி சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி நடிகை ரோஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள நடிகை ரோஜாவின் புகழைக் கெடுக்கும் வகையில் ஆந்திராவில் அவருடைய ஆபாச படம் கடந்த வாரம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, விஜயநகரம், அமலாபுரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.களில் இந்த படம் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதாம்.

5 நிமிடம் மட்டும் ஓடும் இந்த ஆபாச படத்தை தற்போது, விஷமிகள் சிலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும் பரப்பி வருகிறார்களாம்.

இந்த படத்தில் பல ஆண்களுடன் ரோஜா செக்ஸ் வைத்துக் கொள்வது போலவும், நீச்சல் குளத்தில் நிர்வாணமாக நீந்திக் குளிப்பதுபோலவும் காட்சிகள் அமைந்துள்ளனவாம். ஆந்திர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன இந்த வீடியோ காட்சிகள்.

'அசல் அல்ல, மார்ப்பிங்!'

ஆனால் உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது ரோஜா அல்ல என்றும் அவரது உருவத்தையொத்த பெண்ணின் உடலில் ரோஜாவின் தலையை கச்சிதமாகப் பொருத்தி சில விஷமிகள் ஆபாசம் படம் தயாரித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சந்திரகிரி தொகுதியில் ரோஜாவின் வெற்றி நிச்சயமாகிவிட்டதாலும், அவர் பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களில் கிடைக்கு மக்கள் ஆதரவைக் கண்டு பயந்தும் இப்படி கீழ்த்தரமான சதிகளில் சிலர் இறங்கியிருப்பதாக தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகிறார்கள்.

இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறுகையில், "இந்த ஆபாச படம் மார்பிங் முறையில் போலியாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை முன்பு எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவர், அதை போலி என்று கண்டுபிடித்துவிட்டார். தற்போது அதே படத்தை கேபிள் டி.வி.யில் வெளியிட்டும், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பியும் எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்கள்.

இந்த ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ரோஜாவிடம் கேட்டபோது, இது மாதிரியான சதித் திட்டங்கள் மூலம் எனது அரசியல் வாழ்க்கையை யாராலும் முடித்து விடமுடியாது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது பற்றி புகார் செய்வேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X