ஷில்பா ஷெட்டியின் தந்தைக்கு பாஸ்போர்ட் வழங்க கோர்ட் உத்தரவு

கடந்த 2003ம் ஆண்டு பணம் கேட்டு மிரட்டியதாக சூரத்தில் கைதானார் சுரேந்தர் ஷெட்டி. அப்போது அவரது பாஸ்போர்ட்டை சூரத் கோர்ட் முடக்க உத்தரவிட்டது. பின்னர் சுரேந்தர் ஷெட்டி ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், சூரத் கோர்ட்டை அணுகிய சுரேந்தர் ஷெட்டி, தனது மகள் (ஷில்பா அல்ல) கல்யாணத்தில் கலந்து கொண்ட வேண்டியிருப்பதாலும், பிசினஸ் தொடர்பாக வெளிநாடு போக வேண்டியிருப்பதாலும், தனது பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் என்று கோரி விண்ணப்பித்தார்.
இதை விசாரித்த நீதிபதி வியாஸ், ஷெட்டியிடம் ரூ. 2.5 லட்சத்திற்கான உத்தரவாதப் பத்திரம் பெற்றுக் கொண்டு பாஸ்போர்ட்டை ஒப்படைக்கலாம் என உத்தரவிட்டார்.
மேலும், சுரேந்தர் ஷெட்டி 2010ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
Comments
அனுமதி குற்றம் கோர்ட் சினிமா சுரேந்தர் ஷெட்டி தந்தை பாஸ்போர்ட் மிரட்டல் ஷில்பா ஷெட்டி cinema father passport permission shilpa shetty surendar shetty


Click it and Unblock the Notifications