நெப்போலியன், ஜெகத்ரட்சகனுக்கு நடிகர் சங்கம் விழா

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து முதன்முதலாக மத்திய இணை அமைச்சர் ஆகியிருப்பவர், நெப்போலியன். மேலும் திரைத்துறையை கட்டுப்படுத்தும் தகவல் ஒலிபரப்பு துறைக்கு இணை அமைச்சராகியிருப்பவர் ஜெகத்ரட்சகன். எனவே இவ்விருவருக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
சென்னை தியாகராயநகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில், செப்டம்பர் 5 ந் தேதி இந்த விழா நடக்கிறது.
விழாவில், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். செயலாளர் ராதாரவி முன்னிலை வகிக்கிறார்.
நடிகர் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமாய் பங்கேற்க உள்ளனர்.
Comments
சினிமா ஜெகத்ரட்சகன் தமிழ் நடிகர் சங்கம் நெப்போலியன் பாராட்டுவிழா cinema felicitation jagathrakshagan nadigar sangam napoleon union ministers


Click it and Unblock the Notifications