மாறியது எஸ்ஜே சூர்யாவின் 'புலி'

விஜய்க்காக சூர்யா ரெடி செய்த கதைதான் இந்த புலி. ஆனால் கதையில் சின்னச் சின்ன சேஞ்சஸ் சொன்ன விஜய், ஒரு கட்டத்தில் இந்தக் கதையையே மாற்றி விடலாம் என சொன்னதால் அதிர்ச்சி அடைந்த சூர்யா, புலி படத்தை விஜய்ய வைத்து எடுப்பதைக் கைவிட்டார்.
பின்னர் அவர் நடிப்பில் பிசியாகி விட்டார். இந்த நிலையி்ல தற்போது தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து புலியை இயக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. படத்திற்கு புலி என்றே பெயர் சூட்டியிருந்தார்.
பாதிப் படம் வளர்ந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் பெயர் கோமுரம் புலி என மாற்றப்பட்டுள்ளது. மாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
புலி படத்தில் 'பூனை'யாக நடிப்பது அதாவது ஹீரோயினாக நடிப்பது லண்டனைச் சேர்ந்த நிகேஷா படேல்.
சரி, தெலுங்கில் பவன் கல்யாணுக்கு என்ன பட்டப் பெயர் தெரியுமா 'பவர்' ஹீரோ!
Comments


Click it and Unblock the Notifications