twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நண்பேன்டா... உதயநிதி ஜோடி த்ரிஷா!

    By Chakra
    |

    நண்பேன்டா படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா.

    தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பாளராக மாறியுள்ள துணை முதல்வர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அடுத்து புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார்.

    இந்தப் படத்துக்கு நண்பேன்டா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப் படம் தந்த ராஜேஷ் எம் இயக்குகிறார்.

    இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடி யார் என்பதில் பலரது பெயர்கள் அடிபட்டன. குறிப்பாக களவாணி படத்தில் கலக்கிய ஓவியா நடிக்கக் கூடும் என்றார்கள்.

    ஆனால் இப்போது, உதயநிதியின் ஜோடியாக த்ரிஷா முடிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இயக்குநர் ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    உதயநிதி தயாரித்த குருவி, மன்மதன் அம்பு படங்களில் நாயகியாக நடித்தவர் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Leading producer a Udhayanidhi Stalin is turning hero in a film titled Nanbenada. The film will be directed by Rajesh of Boss Engira Baskaran. According to Rajesh, Trisha is playing the lead lady role against Udhayanidhi in this film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X