விஜய் டிவியின் புத்தாண்டு கொண்டாட்டம்

By Sudha

New Year 2011 Special Progarammes on Vijay TV
வித்தியாசமான நிகழ்ச்சிகளை அடுக்கடுக்காக கொடுத்து தமிழர்களின் மனதி தனி இடம் பிடித்துள்ள விஜய் டிவி 2011ம் ஆண்டையும் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் வரவேற்கவுள்ளது-நேயர்களுடன் சேர்ந்து.

நட்சத்திர கார்காலம்

டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு க்ரூசோ நட்சத்திர கார்காலம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில், 2011ம் ஆண்டு காலண்டருக்கான படமாக்கலில் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளனர் விக்ரம், திரிஷா, சூர்யா, நாகார்ஜூனா, சிம்பு, ஆர்யா, கார்த்தி, நயனதாரா, தமன்னா, ஷ்ரியா, ஜெனிலியா, ஸ்ருதி ஹாசன் மற்றும் புகைப்படக்காரர் வெங்கட் ராம்.

2011ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி காலை 7.05 மணிக்கு புகழ் பெற்ற ஜோதிடர் சிவல்புரி சிங்காரம் மற்றும் எண்ணியல் நிபுணர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் 12 நட்சத்திரக்காரர்களுக்கும் 2011ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை கணித்துச் சொல்லவுள்ளனர்-பிரஸ்டிஜ் மிக்ஸர் கிரைண்டர் வழங்கும், டிவிஎச் ஸ்வஸ்தியின் ஆண்டு பலன் நிகழ்ச்சியில்.

சீரும் சிறுத்தை

காலை 8 மணிக்கு பிரஸ்டிஜ் மிக்ஸர் கிரைண்டர் வழங்கும் டிவிஎச் ஸ்வஸ்தியின் சீரும் சிறுத்தை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். சிறுத்தை படத்தின் நட்சத்திரங்களான கார்த்தி, தமன்னா, சந்தானம் பங்கேற்கிறார்கள். படப்பிடிப்பில் தங்களது நகைச்சுவையான அனுபவங்களை இவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

உலகநாயகனுடன் ஒரு உரையாடல்

காலை 9 மணிக்கு பிரஸ்டிஜ் மிக்ஸர் கிரைண்டர் வழங்கும் உலகநாயகனுடன் ஒரு உரையாடல் இடம் பெறுகிறது. பத்மஸ்ரீ கமல்ஹாசனுடன் நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் நிகழ்ச்சி இது.

காலை 10 மணிக்கு லயன் டேட்ஸ் சிரப் வழங்கும் நீயா நானா புத்தாண்டு ஸ்பெஷல். இயக்குநர் நடிகர் பார்த்திபன், நடிகைகள் குஷ்பு, ரேவதி, சுஹாசினி, ரோஹினி, இயக்குநர்கள் ராம், வெற்றிமாறன், மிஷ்கின், லிங்குச்சாமி, ராதாமோகன், மனோபாலா, நடிகர் இளவரசு ஆகியோர் பங்கேற்கும் கமர்ஷியல் படங்களா, கலைப் படங்களா என்ற சுவாரஸ்யமான மோதல்.

களவாணி

பிற்பகல் 12 மணிக்கு களவாணி திரைப்படம் ஒளிபரப்பாகும்.

மாலை 3 மணிக்கு மூவி ரவுண்டப் 2010 ஒளிபரப்பாகிறது. இதில் இயக்குநர்கள் கெளதம் மேனன், வசந்தபாலன், ஜனநாதன், சிம்புதேவன், மிஷ்கின், பொன்வண்ணன், சித்தார்த், நடிகர்கள் நாசர், சுஹாசினி மணிரத்தினம், ரேவதி, ரோஹினி, சரண்யா, அங்காடித் தெரு அஞ்சலி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மிளகா

மாலை 4 மணிக்கு சூப்பர் ஹிட் திரைப்படம் மிளகா ஒளிபரப்பாகிறது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன் புத்தாண்டையொட்டி ஒளிபரப்பாகும் அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளையும் காண அழைக்கிறது விஜய் டிவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X