சினிமா ஸ்டைல்-தொகுதியை பெற்ற விஜய்சாந்தி!

ஆந்திராவைப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் கேட்கும் கட்சி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி. இதே கோரிக்கைகளுடன் நடிகை விஜய்சாந்தியும் சமீபத்தில் 'தல்லி தெலுங்கானா' என்ற கட்சியைத் துவங்கினார்.
இணைந்து போராடினால் கோரிக்கை எளிதில் நிறைவேறும் என்று சந்திரசேகர ராவ் விடுத்த அழைப்பை ஏற்று தன் கட்சியை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியுடன் இணைத்தார் விஜய்சாந்தி.
அவருக்கு தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மகளிர் அணி தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலில் மேடக் தொகுதியில் போட்டியிட விஜய்சாந்தி விரும்பினார்.
ஆனால், அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். அதனால், ஆத்திரம் அடைந்த விஜய்சாந்தியின் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர். வேறு வழியின்றி சந்திரசேகர ராவ் பின்வாங்கி விட்டார். தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்ட அவர், மேடக் தொகுதியில் விஜய்சாந்தி போட்டியிடுவார் என்று நேற்று அறிவித்தார்.
அந்த தொகுதியில் ஏப்ரல் 16-ந் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. எனவே, விரைவில் விஜய்சாந்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதே நேரத்தில் மேடக் தொகுதிக்கு பதிலாக, மெகபூப் நகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











