twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலம் கடந்து பேசும் காதல் காவியம்.. கேளடி கண்மணிக்கு வயசு 30 ஆகுது!

    |

    சென்னை : இயக்குனர் வசந்த் இயக்கிய முதல் திரைப்படமான கேளடி கண்மணி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது .

    இளம் வயது காதலையும் நடுத்தர வயது காதலையும் ஒரே கதையில் புகுத்திய திரைக்களத்தை கொண்டு வெளியானது இந்த திரைப்படம்.

    இருவேறு காதலை மையமாக கொண்டு வெளியான காலத்தால் அழியாத இந்த காவியம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.

    ஆஸ்கர் விருதை வென்ற பிறகு.. பாலிவுட்டில் என்னையும் ஒதுக்கினார்கள்.. ரசூல் பூக்குட்டி பரபரப்பு! ஆஸ்கர் விருதை வென்ற பிறகு.. பாலிவுட்டில் என்னையும் ஒதுக்கினார்கள்.. ரசூல் பூக்குட்டி பரபரப்பு!

    காலத்தால் அழியாத காவியமாக

    காலத்தால் அழியாத காவியமாக

    தமிழ் சினிமாவில் அழுத்தமான படைப்புகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களால் மிக உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு காலத்தால் அழியாத காவியமாக பல ஆண்டுகள் கடந்தும் திகழ்ந்து வருகிறது. இது போன்ற கதைகளை இயக்குவதில் கே பாலச்சந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் திரைத்துறையில் இருந்த நிலையில் வசந்த் என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய கேளடி கண்மணி திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

    இரு வேறு காதலை

    இரு வேறு காதலை

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் பலர் தொண்ணூறுகளில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில், அப்படி எந்த ஒரு உச்ச நட்சத்திரங்களும் இந்த படத்தில் கிடையாது, இளம் வயது காதலையும் நடுத்தர வயது காதலையும் ஒரே கதையில் புகுத்திய திரைக்களம் தான் "கேளடி கண்மணி" திரைப்படத்தின் மிகப்பெரிய பலம். தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளில் கேளடி கண்மணி திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஒரு இடம் உண்டு.

    காதலை புரிந்துகொண்டு

    காதலை புரிந்துகொண்டு

    தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளரும் மகள், வீட்டிற்கு வந்து பாடம் எடுக்கும் ஆசிரியையுடன் தந்தைக்கு ஏற்படும் காதல் இதை தெரிந்து இருவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தும் மகள், ஒரு கட்டத்தில் தந்தையின் காதலை புரிந்துகொண்டு இருவரையும் சேர்த்து வைக்கிறார். இப்படி ஒரு வித்தியாசமான கதைக்களமும் அதைத் திரையில் சொன்ன விதமும் கேளடி கண்மணி திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.

    அழியாத காதல் திரைப்படம்

    அழியாத காதல் திரைப்படம்

    இயக்குனர் வசந்த் தான் இயக்கிய முதல் படத்திலேயே அகவையில் மூத்தவர்களின் காதலை சொன்ன விதம் பலரையும் யார் இந்த இயக்குனர் என உற்றுநோக்க வைத்தது. எஸ் பி பாலசுப்ரமணியம், ராதிகா, அஞ்சு , மற்றும் ரமேஷ் அரவிந்த் போன்றோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 285 நாட்களை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வெற்றியடைந்து காலத்தால் அழியாத காதல் திரைப்படமாக இன்றும் திகழ்ந்து வருகிறது.

    மூச்சு விடாமல் பாடும்

    மூச்சு விடாமல் பாடும்

    இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்த இந்த படத்தின் பாடல் இசை மிகவும் பிரபலமடைந்த நிலையில், எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் ராதிகா இருவரும் கடற்கரையில் பாடும் "மண்ணில் இந்த காதலின்றி" பாடலை எஸ்பிபி மூச்சு விடாமல் பாடப் பட்டதாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

    உதவி இயக்குனராக

    உதவி இயக்குனராக

    இப்படி வித்தியாசமான திரைக்கதையின் மீது நம்பிக்கை கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஒரு தரமான திரைப்படத்தைக் கொடுத்த இயக்குனர் வசந்த் முதல் படத்திலேயே ஹிட்டடித்து மிகப்பிரபலமான இயக்குனரானார். இவர் கே பாலச்சந்தர் இடம் உதவி இயக்குனராக சிந்து பைரவி, புன்னகை மன்னன் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

    உதிரிப்பூக்கள்

    உதிரிப்பூக்கள்

    உதிரிப்பூக்கள், சங்கராபரணம், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வராகங்கள், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்கள் இது போன்ற கதைகள் உருவாவதற்கு அடித்தளமிட்டது என இயக்குனர் வசந்த் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இவ்வாறு காதலின் பரிமாணங்களை வித்தியாசமான கதைகளில் கொண்ட கேளடி கண்மணி திரைப்படம் தெலுங்கு மொழியில் "ஓ பாப்பா லாலி" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

    கே பாலச்சந்தர் எங்கும்

    கே பாலச்சந்தர் எங்கும்

    இவ்வாறு மிகச் சிறந்த திரைப்படமாக இன்றளவும் போற்றப்பட்டு வரும் கேளடி கண்மணி திரைப்படத்தை, தனக்கு இயக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என எங்கும் திரைப்படங்களின் பட்டியலில் கேளடி கண்மணி திரைப்படமும் ஒன்று என இயக்குனர் கே பாலச்சந்தர் ஒரு பேட்டியில் கூறி இந்த படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரத்தை கொடுத்திருந்தார்.

    காலத்தால் அழியாத காதல் காவியம்

    காலத்தால் அழியாத காதல் காவியம்

    இவ்வாறு கேளடி கண்மணி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் கடந்தும் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இருந்து விலகாத காலத்தால் அழியாத ஒரு மாபெரும் காதல் காவியமாக இன்று வரை இருந்து வருகிறது.

    English summary
    30 years of Keladi Kanmani
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X