கஜினி..ஒரு ஓடல்-ஒரு தவிப்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் பட்வானியைச் சேர்ந்தவர் நதீம் கான். 10வது படித்து வரும் மாணவனான நதீம் கான், ஆமி்ர்கானின் தீவிர ரசிகர்.
கஜினி படம் வெளியானதைத் தொடர்ந்து அதைப் பார்க்க துடித்தார் நதீம் கான். ஆனால் அவரது ஊரான செந்தா நகரில் படம் ரிலீஸாகவில்லை. இதையடுத்து இந்தூருக்குப் போய் படம் பார்க்க முடிவு செய்தார்.
வீட்டிலிருந்து ரூ. 150 பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிய நதீம் கான், இந்தூர் வந்து சேர்ந்தார். ஆனால் வழியிலேயே பணம் முழுவதும் செலவாகி விட்டது.
இதனால் இந்தூருக்கு வந்தும் கூட டிக்கெட் எடுக்க முடியாமல் போனது.
பணமும் இல்லாமல், படமும் பார்க்க முடியாமல், வீட்டுக்கும் திரும்ப முடியாமல் தவித்துள்ளார் நதீம் கான். இதையடுத்து வேறு வழியின்றி வீட்டுக்குப் போன் செய்து தனது நிலையைத் தெரிவித்தார்.
இதற்கிடையே, நதீமைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். ஆனால் நதீமிடமிருந்து போன் வந்ததை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
அவரது மாமா இந்தூருக்கு விரைந்து சென்று தவித்துக் கொண்டிருந்த நதீமை மீண்டும் ஊருக்கு அழைத்துச் சென்றார்.
கஷ்டப்பட்டு வந்தும் கஜினி பார்க்க முடியாத சோகத்தில் திரும்பிச் சென்றார் நதீம்.


Click it and Unblock the Notifications











